Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூன் 23….!!

கிரிகோரியன் ஆண்டு :  174 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  175 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு :  191 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார்.

1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்றபோர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.

1611 – என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.

1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.

1713 – அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.

1757 – பிளாசி சண்டை: ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.

1760 – ஏழாண்டுப் போர்: லாண்டிசட் சமரில் ஆஸ்திரியா புருசியாவைத் தோற்கடித்தது.

1794 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.

1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.

1894 – பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.

1940 – இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.

 

 

1940 – என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.

1941 – இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.

1946 – கனடாவின் வான்கூவர் தீவு,வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.

1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

1967 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.

1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.

1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.

2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.

2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.

2016 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

2017 – பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.

 

பிறப்புகள்:

1616 – ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661)

1668 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744)

1876 – க. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1952)

1877 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)

1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)

1906 – திரிபுவன் வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் (இ. 1955)

1912 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)

1922 – ராஜகோபால தொண்டைமான், புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)

1925 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)

1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)

1934 – வீரபத்ர சிங், இந்திய அரசியல்வாதி

1937 – மார்ட்டி ஆத்திசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்

1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)

1943 – வின்டு செர்ப்பு, அமெரிக்க இணைய முன்னோடி

1946 – இறபீக் சாமி, சிரிய-செருமனிய எழுத்தாளர்

1953 – சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)

1972 – ஜீனடின் ஜிதேன், பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்

1974 – ஜோல் எட்கர்டன், ஆத்திரேலிய நடிகர்

1980 – ராம்நரேஷ் சர்வான், கயானாத் துடுப்பாளர்

1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய டென்னிசு வீராங்கனை

 

இறப்புகள்:

79 – வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9)

1836 – ஜேம்ஸ் மில், இசுக்காட்டிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1773)

1891 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)

1891 – நார்மன் இராபர்ட் போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)

1925 – பிட்டி தியாகராயர், திராவிட இயக்கத் தலைவர், நீதிக்கட்சியின் நிறுவனர் (பி. 1852)

1939 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (பி. 1885)

1971 – சிறீ பிரகாசா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)

1980 – சஞ்சய் காந்தி, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)

1983 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)

1984 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (பி. 1922)

1995 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)

2015 – நிர்மலா ஜோஷி, இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)

2015 – பிரபுல் பிட்வாய், இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)

சிறப்பு நாள்:

தந்தையர் தினம் (நிக்கராகுவா, போலந்து)

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

வெற்றி விழா (எசுத்தோனியா)

 

Categories

Tech |