விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது.
அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கும் விக்ரம்-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய விண்வெளி திட்டத்தின் நிறுவனம் விக்ரம் சாராபாய் அவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய வகையில் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.