கிரிகோரியன் ஆண்டு : 211 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 212 ஆவது நாள்.
ஆண்டு முடிவிற்கு : 154 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது.
1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார்.
1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது.
1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.
1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர்.
1733 – முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது.
1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.
1811 – மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.
1865 – அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.
1866 – அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1871 – நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.
1912 – சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.
1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.
1962 – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1966 – இங்கிலாந்து அணி மேற்கு செருமனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
1969 – வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.
1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.
1971 – சப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.
1980 – பிரான்சு, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1981 – கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
1997 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.
2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.
2012 – தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2014 – மகாராட்டிரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)
1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)
1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)
1898 – ஹென்றி மூர், ஆங்கிலேய சிற்பி (இ. 1986)
1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)
1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)
1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)
1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்
1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்
1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்
1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்
1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்
1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்
1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)
1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை
1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்
1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்
1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்
1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்
1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்
இறப்புகள்:
1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)
1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)
1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)
1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)
1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்
2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)
2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)
2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)
2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)
சிறப்பு நாள்:
மாவீரர் நாள் (தெற்கு சூடான்)
விடுதலை நாள் (வனுவாட்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980).