Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 4….!!

கிரிகோரியன் ஆண்டு :  185 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  186 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு :  180 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

414 – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள்.

1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும்  டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது.

1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார்.

1456 – உதுமானிய-அங்கேரிப் போர்கள்: பெல்கிறேட் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1534 – மூன்றாம் கிறித்தியான் டென்மார்க்-நோர்வே மன்னராக முடிசூடினார்.

1610 – குளூசினோ நகரில் போலந்து-லித்துவேனியாவுக்கும், உருசியாவுக்கும் போர் இடம்பெற்றது.

1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது.

1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.

1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமசு ஜெஃபர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே அமெரிக்க விடுதலைச் சாற்றுரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.

1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.

1862 – லூயிஸ் கரோல் ஆலிசு லிடெலுக்கு ஒரு கதையைச் சொன்னார். இதுவே பின்னர் ஆலிசின் அற்புத உலகம் என வழங்கப்பட்டது.

 

 

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பி, விக்சுபர்க் நகரம் 47 நாட்கள் முற்றுகையின் பின்னர் யுலிசீஸ் கிராண்ட் தலைமையிலான அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடக்கு வர்ஜீனியா இராணுவம் கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து அங்கிருந்து விலக ஆரம்பித்தது.

1879 – ஆங்கில-சூலூ போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, திங்கட்கிழமை (சூலை 4) இரண்டு நாட்களாக வந்ததில், சமோவாவில் இவ்வாண்டு 367 நாட்களைக் கொண்டிருந்தது.

1898 – நியூயார்க்கில் இருந்து லே ஆவர் சென்று கொண்டிருந்த கப்பல் சேபில் தீவுக்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில் 549 பேர் உயிரிழந்தனர்.

1903 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.

1911 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே பெரும் வெப்ப அலை தாக்கியதில் 380 பேர் வரை உயிரிழந்தனர்.

1914 – சாரயேவோவில் ஆறு நாட்களுக்கு படுகொலை செய்யப்பட்ட இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி சோஃபி ஆகியோரின் இறுதி நிகழ்வுகள் வியன்னாவில் இடம்பெற்றன.

1918 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு மற்றும் அவரது குடும்பத்தினர் போல்செவிக்குகளினால் கொல்லப்பட்டனர்.

1934 – அணுகுண்டுகளில் பின்னர் பயன்படுத்தப்பட்ட செயல் விளைவுத் தொடரின் வடிவமைப்புக்கு லியோ சிலார்டு என்பவர் காப்புரிமம் பெற்றார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ரீகா நகரில் யூத தொழுகைக் கூடம் ஒன்று நாட்சிகளால் 300 யூதர்களுடன் எரியூட்டப்பட்டது.

1941 – நாட்சிகள் உக்ரைனில் லிவீவ் என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.

 

 

1942 – இரண்டாம் உலகப் போர்: கிரிமியாவில் 250-நாள் செவஸ்தபோல் முற்றுகை அச்சுப் படைகள் அந்நகரைக் கைப்பற்றியதை அடுத்து முடிவுக்கு வந்தது.

1946 – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.

1951 – வில்லியம் ஷாக்லி திரான்சிஸ்டரைத் தாம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.

1961 – சோவியத் அணுவாற்றல் நீர்மூழ்கி கே-19 தன வெள்ளோட்டத்தில் பழுதடைந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி காரணமாக அடுத்த இரு ஆண்டுகளில் இறந்தனர்.

1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்சு விமானத்தில் இருந்த நால்வரைத் தவிர ஏனையோரை இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.

1982 – ஈரானிய தூதர்கள் மூவர், ஒரு ஊடகவியலாளர் லெபனானில் கடத்தப்பட்டனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை அறியப்படவில்லை.

1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் நடைபெற்றது.

1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டா தலைநகர் கிகாலி ருவாண்டா தேசப்பற்று முன்னணியினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அந்நகரில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.

1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.

1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி ஏவியது.

2001 – விளாதிவசுத்தோக் வான்னூர்தி ஒன்று இர்கூத்சுக்கை அணுகும் போது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 145 பேரும் உயிரிழந்தனர்.

2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

 

பிறப்புகள்:

1790 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சு புவியியலாளர் (இ. 1866)

1804 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1864)

1807 – கரிபால்டி, இத்தாலிய அரசியல்வாதி (இ. 1882)

1844 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க-இத்தாலிய சிற்பி (இ. 1907)

1868 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (இ. 1933)

1871 – ஊபர்ட் பூத், ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1955)

1872 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (இ. 1933)

1884 – சு. இராசரத்தினம், இலங்கை அரசியல்வாதி, சைவ சமயப் பெரியார் (இ. 1970)

1898 – குல்சாரிலால் நந்தா, இந்திய அரசியல்வாதி (இ. 1998)

1910 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2010)

1933 – கொனியேட்டி ரோசையா, ஆந்திரா அரசியல்வாதி

1954 – தேவேந்திர குமார் ஜோஷி, இந்தியக் கடற்படைத் தலைவர்

1956 – லட்சுமிகாந்த் பர்சேகர், இந்திய அரசியல்வாதி

1959 – விக்தோரியா அபுரீல், எசுப்பானிய நடிகை

1961 – மரகதமணி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்

 

இறப்புகள்:

965 – ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

1826 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1735)

1826 – தாமசு ஜெஃபர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1743)

1831 – ஜேம்ஸ் மன்ரோ, அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1758)

1850 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. 1759)

1896 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1850)

1902 – விவேகானந்தர், இந்திய சமயத் தலைவர் (பி. 1863)

1910 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (பி. 1835)

1925 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய கத்தோலிக்க அருளாளர் (பி. 1901)

1934 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-போலந்து வேதியியலாளர் (பி. 1867)

1963 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (பி. 1876)

1975 – எஸ். பி. சீனிவாசகம், மலேசிய அரசியல்வாதி (பி. 1917)

1992 – கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)

2016 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானிய திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர் (பி. 1940)

சிறப்பு நாள்:

விடுதலை நாள் (ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியாவிடம் இருந்து 1776)

விடுதலை நாள் (வடக்கு மரியானா தீவுகள்)

விடுதலை நாள் (ருவாண்டா)

குடியரசு நாள் (பிலிப்பீன்சு)

 

Categories

Tech |