கிரிகோரியன் ஆண்டு : 189 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 190 ஆவது நாள்.
ஆண்டு முடிவிற்கு : 176 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.
1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.
1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார்.
1709 – உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார்.
1730 – சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1760 – புதிய பிரான்சில் இடம்பெற்ற கடற் சமரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1859 – சுவீடன்-நோர்வே மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.
1876 – தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்..
1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.
1892 – நியூபவுண்லாந்தின் சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1932 – டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு பெரும் பொருளியல் வீழ்ச்சியின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) எட்டியது.
1937 – துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் தெகுரானில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.
1947 – அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.
1962 – ரங்கூனில் மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.
1966 – புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1972 – பாலத்தீன எழுத்தாளர் கசன் கனஃபானி இசுரேலிய மொசாட் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
1982 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1988 – பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1990 – செருமனி அர்கெந்தீனாவை வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
1994 – கிம்-இல்-சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் கிம் ஜொங்-இல் வட கொரியாவின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
2006 – ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
2011 – அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
பிறப்புகள்:
1831 – ஜான் ஸ்டைத் பெம்பர்டென், கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க வேதியியலாளர் (இ. 1888)
1839 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1937)
1863 – சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (இ. 1929)
1906 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. 2005)
1914 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 6வது முதலமைச்சர் (இ. 2010)
1949 – எ. சா. ராஜசேகர், ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (இ. 2009)
1966 – ரேவதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1969 – சுகன்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1972 – சௌரவ் கங்குலி, இந்தியத் துடுப்பாளர்
1977 – மிலோ வேண்டிமிக்லியா, அமெரிக்க நடிகர்
1998 – ஜேடன் சிமித், அமெரிக்க நடிகர்
இறப்புகள்:
1623 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1554)
1695 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1629)
1822 – பெர்சி பைச்சு செல்லி, ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1792)
1928 – கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன், அமெரிக்க சட்ட அறிஞர், பெண்ணியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் (பி. 1881)
1939 – ஹேவ்லாக் எல்லிஸ், ஆங்கிலேய உளவியலாளர் (பி. 1859)
1971 – ஏ. என். கிருஷ்ணராவ், கன்னட எழுத்தாளர், இலக்கியவாதி (பி. 1908)
1980 – மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழறிஞர் (பி. 1900)
1989 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (பி. 1924)
2006 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1908)
2007 – சந்திரசேகர், இந்தியாவின் 9வது பிரதமர் (பி. 1927)
2011 – கா. கலியபெருமாள், மலேசிய எழுத்தாளர் (பி. 1937)
2012 – ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
2014 – நீலமேகம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
2016 – புர்கான் முசாபர் வானி, காசுமீரி விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1994)