Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறண்டு விடும் நிலையிலிருக்கும் மூல வைகை ஆறு…. போதிய மழையில்லாததால் நேர்ந்த விளைவு…. தேனியில் சுட்டெரிக்கும் வெயில்….!!

தேனியிலிருக்கும் மூல வைகை ஆற்றில் நீரின் வரத்து குறைந்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திலிருக்கும் மூல வைகை ஆறு வெள்ளிமலை வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணத்தால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாகவே மூல வைகை ஆற்றிற்கு நீர்வரத்து இருந்துள்ளது.

ஆனால் கடந்த சில மாதமாக அவ்வனப்பகுதியில் போதிய அளவிற்கு மழை இல்லை. அதற்கு மாறாக வெயிலினுடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மூல வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் வருகின்ற தினங்களில் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விடும் நிலை உருவாகும்.

Categories

Tech |