Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. பெண் செய்த செயல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு பகுதியில் வெங்கடேஷ்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யா தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சத்யா கூறியபோது எனது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் மிரட்டி வருகிறார்.

இதுகுறித்து கடத்தூர், அரூர் காவல் நிலையங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்ற இடங்களில் நான் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது யார் ஆதரவும் இல்லாமல் தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். எனவே வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் எனது மாமியார் மீது நடவடிக்கை எடுத்து, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கும்படி சத்யா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |