Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்” கலந்துகொண்ட முன்னாள் முதல்வர்…. ஆலய நிர்வாக குழு சார்பில் மரியாதை….!!

வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் திருப்பணிகள் முழுவதும் நிறைவுபெற்று ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து பல்வேறு வேள்விகள் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் சிறப்பு விருந்தாளராக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அப்பகுதி பொதுமக்களுடன் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஆலய நிர்வாக குழுவின் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

Categories

Tech |