Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட ஆய்வு…. விடுதி வார்டன் பணியிடைநீக்கம்…. கலெக்டர் உத்தரவு….!!

அரசு மாணவர் விடுதி வார்டனை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. அந்த விடுதியில் ரவி என்பவர் வார்டனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவர் விடுதியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அந்த விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் விடுதி வார்டன் ரவியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |