Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! வருடந்தோறும் 3.4 பில்லியன் பவுண்டுகளா…? இலவசப் பள்ளிகளை ஆதரிக்க வழிவகை…. அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து….!!

இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருடந்தோறும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுமார் 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வரை வருவாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்து நோக்கத்தோடும், NHS ஐ காப்பாற்றும் நோக்கத்தோடு தினந்தோறும் நாம் பயன்படுத்தும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது என்பதாகும். இந்த புதிய வரி விதிப்பின் மூலம் இங்கிலாந்தின் உணவு பழக்கங்களில் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்தால் பல உயிர்களை காப்பாற்றலாம் என்றும் தேசிய உணவு மூலோபாயம் கூறியுள்ளது.

இதனையடுத்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் ஒவ்வொரு இங்கிலாந்து வாசிகளும் சுமார் 60 பவுண்ட்ஸ்களை வருடந்தோறும் அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த நேரிடும் என்றும், அதன்மூலம் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 3.4 பில்லியன் பவுண்டுகள் வரை வருவாயாக கிடைக்கும் என்றும், இந்த வருவாயை பயன்படுத்தி இலவச பள்ளி மற்றும் ஏழைக் குடும்பங்களை ஆதரிக்கலாம் என்றும் தேசிய உணவு மூலோபாயம் கூறியுள்ளது.

Categories

Tech |