Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரி…. புதிதாக நடத்தப்பட்ட ஆலோசனை…. வெளியான அறிக்கை….!!

உலகலாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரி அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு டன்னுக்கு 200 பவுண்டுகள் என்று அறிமுகப்படுத்தவுள்ளதாக இங்கிலாந்தின் முக்கிய அரசு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள சுற்றுச்சூழல் கிராமப்புறம் மற்றும் உணவு தொடர்பான அரசுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலகலாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரி ஒரு டன்னுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 200 பவுண்டுகள் என்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வரி 30% கூட மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தாத பேக்கேஜ்க்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிதாக நடத்தப்பட்ட பொது ஆலோசனையின் மூலம் பல பொருள்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. அவைகள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டி, கப்புகள் போன்றவையாகும்.

Categories

Tech |