நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.