திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். அதில் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ரவுண்டா தடுப்புச்சுவர் சற்று உயரமாக உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. எனவே சாலையில் சீராமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குருவை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க வேண்டும், சோலார் மின்சாரத்திற்கு வழங்கும் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முக்கியமாக மேகதாதுவில் காவிரி அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூறியுள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சற்று பரபரப்பு நிலவியுள்ளது.