Categories
உலக செய்திகள்

பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மாநாடு…. குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாங்காங்கில் பரபரப்பு …!!

பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மாநாடு நடக்கும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்  மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்  இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ   உள்பட பல்வேறு ஆசியன் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Image result for Explosion in Bangkok

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாங்காங்கில்  உள்ள மூன்று பகுதிகளில் அடுத்தடுக்க குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில் குண்டு வெடிபில் துப்புரவு தொழிலில் ஈடுபட்ட 3 பேர் காயம் அடைந்ததாகவும் ,  இது   நாட்டு வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |