Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கல் விருந்தாக வரும் வாரிசு, துணிவு…. எந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள்…. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. இதில் துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் சம தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். வலிமை திரைப்படத்தையும் சில இடங்களில் எங்கள் கம்பெனி பெயர் இல்லாமல் நாங்கள் விநியோகம் செய்தோம். அதன் பிறகு துணிவு திரைப்படத்தை பல மாதங்களுக்கு முன்பாகவே வாங்கி விட்டோம்.

ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு சொல்லலாம் என்று காத்திருந்தோம் என்று கூறியுள்ளார். இந்த தகவலால் இனி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும் வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தங்களுடைய பெயர் இல்லாமல் மறைமுகமாக பின்னால் இருந்து வெளியிடுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |