இந்த வருடத்தின் முதலாவது கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முழுமையாக தெரிந்ததுள்ளது .
சூரியனுக்கும் , பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும் போது , சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவு முழுமையாக மறைக்காது .மாற்றாக ஒரு வளையம் போல சூரியனின் வெளி வட்டம் முழு கிரகணத்தின் போது தெரிவதே கங்கண சூரிய கிரகணம் ஆகும் . கடந்த மே மாதம் 26-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஆனால் இந்தச் சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்த சந்திர கிரகணம் முடிந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும். அதன்படி இந்த ஆண்டு சூரிய கிரகணம் ஏற்படும் என நாசா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நேற்று பிற்பகலில் ஆரம்பித்தது . இந்த கிரகணம் ரஷ்யா ,கனடா மற்றும் கிரீன்லாந்து ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழுமையாக தெரிந்தது . ஆனால் அமெரிக்கா உட்பட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது.மேலும் கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூரிய கிரகணம் பகுதியாக தெரிந்துள்ளது . இதை தொடர்ந்து இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் மட்டும் சிறிது நேரம் இந்த கிரகணத்தை காண முடிந்தது.