நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹிமாச்சலபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வருகிற 31-ஆம் தேதி வரையிலும் கடும் குளிர் நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.