தமிழ் அமைப்பு நிறுவனத்தினர் சார்பில் சவுதி அரேபியாவில்உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஸ்வரன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சவுதி அரேபியாவில் இருந்த ராஜேஸ்வரன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜேஸ்வரனின் மனைவி சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்த தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சவுதி அரேபியாவில் இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ராஜேஸ்வரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து வறுமையில் இருக்கும் ராஜேஸ்வரனின் குடும்பத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர் சங்கத்தினர் சார்பில் 40,000 ரூபாய் மற்றும் தையல் எந்திரம் ஆகியவை அந்த அமைப்பை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரால் சவுந்தர்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது.