Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வறுமையிலும் சாதித்த அரசு பள்ளி மாணவி – மேல் படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம்…!!!

ஆரணி  அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல்,

கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு உதவி கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதைக்கண்ட ஆட்சியர் கந்தசாமி உடனடியாக மாணவி பரிமளாவின் வீட்டிற்கு நேரில் சென்று இனிப்பு வழங்கி மாணவியை வாழ்த்தினார். மாணவி பரிமிளாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் படிப்புச் செலவை முழுமையாக மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று கூறி பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையும் வழங்கினார்.

Categories

Tech |