ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி குதிரைகளுக்கு உணவு அளிக்க முடியாமல் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சில பகுதியில் திருமண வைபோகம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் குதிரை ஊர்வலத்திற்காக, குதிரைகளில் சாரட் வண்டிகள் கட்டியும், நாட்டிய குதிரைகளுக்கு பயிற்சியும் அளித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது.
இதனால் சுபகாரியங்களுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கடந்த 2 ஆண்டுகளாகவே குதிரை ஊர்வலம் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் தீவனபுல், கொள்ளு, கோதுமை தவிடு போன்ற தீவனங்களைை குதிரைகளுக்கு வாங்க வருமானம் இல்லாமல் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் தவிக்கின்றனர். இதனை அடுத்து நாட்டிய குதிரைகளுக்கு தேவையான தீவனங்களை இலவசமாக வழங்க கால்நடை பராமரிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.