இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”.
இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இந்த திரைப்படத்தின் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக “பெடியா” டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் அமர் கவுசிக் கூறியதாவது, “இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் “பெடியா”. இந்த திரைப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறியதாவது, “தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கவுசிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் “பெடியா” திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.