Categories
மாநில செய்திகள்

“வருஷா வருஷம் நடக்கும்… ஆனா இந்த வருஷம் இல்லை”… ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ரத்து..!!

ஆண்டு தோறும் ஆளுநர் மாளிகையில், குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து இம்முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஆளுநர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அன்று மாலை, ஆளுநர் மாளிகையில், முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். இதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |