வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த வருவாய்த்துறை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டத்தில் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி 500- ஐ கடந்து வருகின்றது. இந்நிலையில் சத்துவாச்சாரி மவுண்ட்வியூ அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த பாலா சந்திரகுமார் வேலூர் வருவாய்த்துறை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நல பற்றாக்குறை ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனையில் பாலச்சந்திர குமாருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, காட்பாடி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வேலூர் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு வருவாய்த்துறை ஆய்வாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.