Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய் அலுவலர்…. மிரட்டல் விடுத்த விவசாயி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இந்நிலையில் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் சுப்புலட்சுமி பணியில் இருக்கும்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் ஜெயசீலன் வாட்ஸ்-அப்பிலும் சுப்புலட்சுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி பலவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயசீலனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |