சொக்கநாத சாமி கோவிலில் கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாத சாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்ட உண்டியலில் பணம் திருட்டு போனது. இதனையடுத்து கோவிலில் கொள்ளயடித்துச் சென்ற வாலிபரை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகிலுள்ள ஆனைகுழாய் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கோவில் உண்டியலில் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.