செல்போன் பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பத்தான் பட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் இருக்கின்றார். இவர் பெருமாங்குப்பம் கூட்டு ரோடு சாலையில் கடந்த 7-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்போன் பறித்துச் சென்ற பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு, பிரபாகரன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற பாலாஜி என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.