சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முஹம்மது அபூபக்கர், ராதாகிருஷ்ணன், பாபு, சேகர், அப்துல் ரசாக் ஆகிய 5 வாலிபர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் 4360 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.