காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு அருகில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் 126 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுந்தமாவடி பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வீரமுரசு, செருதூர் எல்லை காளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் கண்ணன் என்பதும், இவர்கள் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீரமுரசு, கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள 126 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர்.