Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி (Vasant Raiji) இன்று காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் 9 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 277 ரன்கள் குவித்துள்ளார். மும்பை மற்றும் பரோடா அணிகளுக்காக தொடக்கம் கொடுத்தவர்.. சமீபத்தில் தன்னுடைய 100ஆவது பிறந்தநாளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் சிறப்பாக கொண்டாடினார். சமீபத்தில் அந்தப் புகைப்படங்கள் சமூகதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் வயது முதிர்வின் காரணமாக வசந்த் ராய்ஜி காலமானார்.. இவர் மறைந்ததை தொடர்ந்து பிசிசிஐ தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |