வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவிற்கு பதில் அதற்கான பணத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் உள்பட 5 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
இதனை அறிந்ததும் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் உணவு வழங்கும் வகையில் தலா 20 ஆயிரம் வீதம் தனது சொந்தப் பணம் ஒரு லட்சத்தை வழங்கியுள்ளார். இதனை அடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ-வின் தம்பி வசந்தம் வேலு அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி உணவுக்கான பணத்தை வழங்கியுள்ளார்.