ஐ பி எல் போட்டியில் இதுவரை பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றாததை குறித்து வாசிம் ஜாபர் உருக்கமுடன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி உள்ளது. இந்தத் தொடர் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியதில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைய செய்துள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கலந்துகொண்டபோது 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.
இதனை அடுத்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ஆட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் இந்திய அணியின் முன்னாள் வீரருமான வாஷிம் ஜாபர்,கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜிந்தா டீம் வின் பண்ணியதா?’ என்று ட்விட் செய்ததை தற்போது ஜாஃபர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது எங்கள் ஆட்டம் இன்று தொடங்குகிறது எனக்கு ஒரே ஒரு ஆசை தான் நடிகர் சல்மான்கான் செய்த ட்விட்க்கு ‘ஆம்’ என்ற பதிலை ட்விட் செய்ய வேண்டும் என்று மிகுந்த உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.