கே ஜி எஃப் 2 படத்தின் வசூல் சாதனை குறித்து பிரபல தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. இப்படம் சமூக வலைத்தளங்களில் பல விதமான நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டு விட்டதாக விஜய் ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
#KGFChapter2 #Kgf2
Day10 collected more than Day1
City & Chengalpet is lit 🔥🔥🔥🔥#RockyBhai is Unstoppable!!! 😎✌🏼 pic.twitter.com/F20oY3JAwW— SR Prabu (@prabhu_sr) April 24, 2022
இதனைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே’ கே ஜி எஃப் 2′ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் தமிழக விநியோகஸ்தரும், பிரபல தயாரிப்பாளருமான எஸ் ஆர் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் படத்தின் வசூல் சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது “கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியான 10 நாளிலேயே ரூபாய் 60 கோடி வசூலை தாண்டி” உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 படத்தால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.