Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவை முந்திய விஜய் சேதுபதி…. வசூலில் அடித்து நொறுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம்…. வெளியான தகவல்….!!!

வசூல் ரீதியாக அடித்து நொறுக்கும் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

தமிழ் சினிமா திரையுலகில் ஹீரோவாக மட்டுமெல்லாமல்  தரமான படங்கள் மூலம் தனித்துவமான நடிப்பில் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம்  வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் கட்டாய வெற்றி நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் இவர் நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீஸான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். அனிருத் இசையில் முக்கோண காதல் கதையாக வெளியான இத்திரைப்படம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் வசூலில்அடித்து நொறுக்கி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் USA வில் சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸான எதற்கும் துணிந்தவன் திரைப் படத்தின் வசூலை இரண்டு நாட்களில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் முறியடித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |