Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையில் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்பனை…!!

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரித் 6 இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள், தயாரிப்பாளர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வட சென்னை பகுதியில் ஆங்காங்கே சட்டவிரோதமாக மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் தபால் பெட்டி பகுதியில்மாஞ்சா நூல் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது மறைவு இடத்தில் மாஞ்சா நூலை தயாரித்து கொண்டிருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், ஜெகன், காமராஜ், ஆனந்த், மணிகண்டன், நிர்மல்குமார் 6 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த ராட்டினம் மற்றும் மாஞ்சா நூல் கண்டுகள் காற்றாடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த இரண்டு நாட்களில் திருவொற்றியூர், மாதவரம், குருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 200கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Categories

Tech |