Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வடமாநில தொழிலாளி…. அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்…. காஞ்சியில் நடந்த சோகம்….!!

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எருமையூர் பகுதியில் அமைந்திருக்கும் எம்.சேண்ட் கிரஷரில் வடமாநிலத்தை சேர்ந்த அபிநய் 2 வாரத்திற்கு முன்பாகவே வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் பிரசாந்த் அருகில் இருக்கும் தொழிலாளர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அபிநய் எந்திர கன்வேயர் பெல்ட்டுக்கு கீழ் இருக்கும் நீர் நிறைந்து இருந்த பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த பிரசாந்த் அருகில் சென்ற போது மின் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று மற்ற தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் மின் இணைப்பை துண்டித்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அபிநய் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |