வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் லாரி போக்குவரத்து முடங்கி கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் அரசு அளித்த சில தளர்வுகளால் தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டியில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி மூலப்பொருள்கள் 30 சதவிகிதம் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த தேக்கம் சிறு பின்னடைவு தான் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.