பிரேசிலில் பரவிய தவறான கூற்றையடுத்து அந்நாட்டிலுள்ள நதியின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான சுரங்க நிறுவனத்தை சார்ந்த எந்திரங்கள் மிதக்க விடப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் மடைய்ரா என்னும் நதி உள்ளது. இதனையடுத்து இந்த நதியின் ஓரத்தில் தங்கப் படிமங்கள் இருப்பதாக தவறான வதந்தி ஒன்று பரவியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேல் குறிப்பிட்டுள்ள தவறான கூற்றை நம்பிய சுரங்க நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆற்றின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான தங்களது நிறுவனத்தை சார்ந்த எந்திரங்களை தங்க படிமங்களை எடுப்பதற்காக மிதக்க விட்டுள்ளார்கள்.
ஆனால் பிரேசில் நாட்டின் அரசாங்கம் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.