Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வட்டி கொடுமை ஒருபுறம்… தொழில் நஷ்டம் மறுபுறம்… 3 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!!

வட்டி கொடுமையால்  3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு  தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை  அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

ஆனால் மீண்டும் தொழிலில் லாபம் கிடைக்காமல்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய கடனிற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மோகன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பூட்டப்பட்டமோகனின்  வீடு இன்று காலை வரை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு மூன்று குழந்தைகளுடன்  தம்பதி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஐந்து பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |