Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம்.

1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள்.

2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும்.

3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு நிரந்தர தீர்வாகும்.

4. புதினா துவையல் அல்லது புதினா பொடியை சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.

5. வெள்ளைப் பூண்டினை பசும் பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பறந்துவிடும்.

6. அஜீரணம், வயிற்று வலி, வாயு இவை மூன்றும் குணமாக குப்பைமேனி இலையை காயவைத்து, பொடி செய்து காலையும் மாலையும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

7. வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.

8. தினந்தோறும் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள், வாயு தொல்லை ஏற்படாது. அதுமட்டுமின்றி ஜீரண சக்தியையும் தூண்டும்.

9. வெண்ணீரில் சுக்கு கலந்து அடிக்கடி குடித்து வாருங்கள். வாயு தொல்லை எளிதில் நீங்கி விடும்.

 

Categories

Tech |