வாழ்க்கையில் விரக்தியடைந்த வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் இவர்கள் அஜித் குமார் என்பவரை எடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அஜீத் குமாருக்கு 25 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அஜித் குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளார். இதனால் அஜித்குமாரின் தொல்லை தாங்காமல் சின்னமணியும் மாரியம்மாளும் இலங்கை குளத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சின்னமணியும், மாரியம்மாளும் அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி காவல்துறையினர் இருவரையும் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னமணியும் மாரியம்மாளும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்து சின்னமணியின் சகோதரர் சுயம்பு பாப்பாக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.