Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலில் சுற்றித்திரிந்த 22 மயில்கள்… விஷம் வைத்து கொலை செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!!

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கீழப்பொய்கைப் பட்டியில் விவசாயிகள் வேளாண்மை தொழில் செய்து வருகின்றனர். அங்கு தோட்டத்தில் விளையும் பயிர்களை உண்ண  வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது. அங்கு ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் உயிர் உயிரிழந்த இறந்து கிடந்தனர். இத்தகவலை அறிந்த மணப்பாறை வனச்சர ரர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 22 மயில்களின் உடல்களை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பின்பு பன்னாங்கொம்பு கீழையூர் கால்நடை மருத்துவர்கள் இந்த மயில்களை உடல்கூறு ஆய்விற்கு கொண்டு சென்றனர். பரிசோதனையின்போது அந்த மயில்கள் உடம்பில் விஷத்தன்மை இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் மயில்களின் உடம்பில் விஷத்தன்மை என்ன என்பதை மருத்துவரால் கூற முடியவில்லை. அதனை அடுத்து திருச்சி மண்டல தடவியல் ஆய்வகத்துக்கு மயில்களின் ரத்த மாதிரியை நாளை அனுப்பி வைக்க உள்ளார். மயில்கள் இறப்பதற்கு காரணமான தோட்ட உரிமையாளர் ராசு மற்றும் அவரது மனைவி பொன்னம்மாள் ஆகிய 2 பேரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வேட்டையாடுதல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்தகவலை கண்ட ராசு தலைமறைவானார். பின்பு அவரின் மனைவி பொன்னம்மாள் வனத்துறையினர் கைது செய்து மணப்பாறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்பு பொன்னம்மாள் நிபந்தனை ஜாமினில வைத்துள்ளனர். இதுபற்றி தேசிய பறவையான மயில்களை கொலை செய்வது பெரும் குற்றம் என்று மாவட்ட அலுவலர் சுஜாதா கூறுகிறார். இதனை கண்டுகொள்ளாத விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மற்றும் விலங்குகளின் உயிரை எடுக்கும் மருந்துகளை அடிக்கின்றனர்.

அதனை அறியாத வனவிலங்குகள் பயிர்களை உண்ணுவதால் இறப்பதாக கூறுகிறார்கள்.  விசாரணை முடிவின்போது இவர்கள்தான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் குறைந்தபட்சம் தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறையில் வைக்கப்படுவார்கள்.  வன அலுவலர் சுஜாதா அவர்கள் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். அதனை அடுத்து இதேபோன்று மயில்கள் இறப்பதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மணப்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 40 மயில்கள் கொல்லப்பட்டனர் என்று கூறுகிறார்கள். அதனை கண்டுகொள்ளாத அலுவலர்கள் இந்த விஷயத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று என்றனர்.

Categories

Tech |