Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலுக்கு தானே போனாங்க… பார்த்ததும் கதறி அழுத தம்பி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள வயலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த பார்வதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வைரவசாமி அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பார்வதியின் உடற்கூறு ஆய்வின் அறிக்கை வெளியான பிறகு தான் அவர் உடல் நலக் குறைவால் இறந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து உள்ளனரா என்ற விவரம் தெரியவரும் என்று அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |