Categories
சினிமா தமிழ் சினிமா

வயதான கெட்டப்பில் கே.எஸ்.ரவிக்குமார்…’ கூகுள் குட்டப்பன்’… சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

கூகுள் குட்டப்பன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் . எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் ரீமேக்  உரிமையை வாங்கிய கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் . இந்தப் படத்தில் மனோபாலா ,யோகிபாபு, பிக்பாஸ் பிரபலங்கள் லாஸ்லியா- தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

 

இந்நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் கே.எஸ் ரவிகுமார் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

Categories

Tech |