அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக… தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து,
அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் பாராட்டிய வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்க்கின்றபோது, அவர்களுக்குள் இருக்கக்கூடிய நெருக்கமும், இணக்கமும், நட்பும் என்னவென்பது புரிந்து கொள்ள முடியும். உழைப்பு, திறமை, மக்கள் சார்ந்த சிந்தனை, ஒரு மனிதன் எப்படி உயர்த்தும் என்பதற்கு உதாரணம் தொல்.திருமாவளவன்.
அதே போல வயது என்பது வெறும் எண் மட்டும்தான், 60 வயது என்று நாம் சொல்கின்றோம். ஆனால் அவர் 18 வயதை கொண்ட இளைஞரை போல இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றார். யாராவது ஒருவர் பார்த்து அவருக்கு 60 வயது ஆகிவிட்டது என்று சொன்னால் நம்புவார்களா ? கொஞ்சம் முடி மட்டும் தாடியில் வெள்ளையாக இருக்கிறது, வேறு ஒன்றும் இல்லை.இப்போதெல்லாம் 18 வயதிலே சிலபேருக்கு முடி நரைக்க ஆரம்பித்த்து விடுகின்றது.
வயதைப் பற்றி கவலை இல்லாமல், உழைப்பு மட்டுமே மூலதனமாகக் கொண்டு, ஒரு விதையை போட்டு, அந்த விதை இன்று ஆலமரமாக ”விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்கின்ற அளவில் இந்தியாவே உற்று நோக்க கூடிய அளவிற்கு அது வளர்ந்து இருக்கிறது, உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது அண்ணன் தொல் திருமாவளவனின் உடைய தனிப்பட்ட உழைப்பு என்பதை இந்த நேரத்தில் நாம் பாராட்டியாக வேண்டும் என தெரிவித்தார்.