சூர்யா 9 இயக்குனர்கள் இயக்க இருக்கும் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு உருவாகியுள்ள குயின் வெப் தொடரில் சோனியாஅகர்வால், ரம்யாகிருஷ்ணன் போன்றோர் நடித்திருக்கின்றனர். தாமிரா இயக்கக்கூடிய தொடரில் சத்யராஜ் சீதா போன்றோரும் நடிக்கவுள்ளனர். மேலும் மீனா, பரத், பாபி சிம்ஹா, நித்யா மேனன் போன்றோரும் வெப் தொடர்களில் நடித்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து நடிகைகள் பிரியாமணி, தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்றோரும் வெப் தொடர்களில் நடிக்கவிருக்கிறார்கள். இத்தகைய நிலையில் நடிகர் சூர்யா வெப்ட் தொடர்களில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 தொடர்கள் கொண்டுள்ள இந்த வெப் தொடருக்கு “நவரசா” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை இயக்குனர்கள் மணிரத்னம், சித்தார்த், ஜெயேந்திரா, அரவிந்த்சாமி உட்பட 9 இயக்குநர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு முழுவதும் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என கருதப்படுகிறது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான “சூரரைப்போற்று” படம் வெளிவர உள்ளது. அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் ‘அருவா’ , மற்றும் வெற்றிமாறன் அவர்களின் ‘வாடிவாசல்’ படங்களிலும் சூர்யா தொடர்ந்து நடிக்க விருக்கிறார்.