Categories
தேசிய செய்திகள்

பட்டாசு தடைக்கு நீதிபதி ஆவேசம் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை நிறுத்த முடியுமா சரமாரி கேள்வி

இந்தியாவில் பட்டாசு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த நீதிபதி வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க முடியுமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

பட்டாசு தயாரிப்பினாலும் பட்டாசுகள் வெடிப்பதினாலும் அதிக அளவிலான மாசுகள் வழிபட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்த நிலையில் அதனை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்

 

இதனை தொடர்ந்து பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது இதனையடுத்து பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால்  பல்வேறு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் ஆகவே தொழிலாளர்களின் நலன் கருதி மீண்டும் பட்டாசு உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது

இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறி ஆனதால்  பட்டாசு தொழிற்சாலை சரியல்ல என்றும் பட்டாசை விட வாகனங்களின் புகையால் அதிக அளவில் மாசு ஏற்படுகிறது ,ஆகையால் பட்டாசுக்கு தடை விதிக்க நினைக்கும் உங்களால்  வாகனங்களின் மாசுபாட்டை தடுத்தது நிறுத்த முடியுமா என்று நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

மேலும் புதிய முயற்சியாக மாசு குறைந்த பட்டாசு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர் தேசிய சுற்றுச்சூழல் மையம் ஆலோசனை ஒன்றை அளித்துள்ளது அதில் வேதிப்பொருட்கள் மிகவும் குறைவாக உள்ள நச்சுப்பொருட்கள் குறைவாக உள்ள மருந்துகள் கொண்ட பட்டாசுகளை தயாரிக்க ஆலோசனை கூறியுள்ளது மேலும் அதற்கான செய்முறைகளையும் கூறி விளக்கம் அளித்துள்ளது இதனை தொடர்ந்து பட்டாசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேதிப்பொருட்கள் குறைந்த நச்சுப் பொருட்கள் குறைந்த மாசு குறைந்த பட்டாசுகளை உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது வருகின்ற மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Categories

Tech |