தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த பெண் தனது குழந்தையை மீட்டுத் தருமாறு பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 19 வயதான Basbibi என்பவரின் கைக்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தைக்கு இருபத்தி மூன்று மாதங்களே ஆகிறது. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் Basbibiயின் கணவர் மற்றும் குழந்தையின் தாத்தாவான சுல்தான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தற்போது குழந்தை முகமதுவையும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் தாயான Basbibi முகமதுவை காப்பாற்ற வேண்டி பிரித்தானியா அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இவர் மட்டும் தற்பொழுது பிரித்தானியாவில் உள்ளார்.
அதாவது, பிரித்தானியா வருவதற்காக விமானத்தில் ஏறச் சென்றபோது விமான நிலையத்திற்கு வெளியே இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எனது உயிர் மட்டும் கடவுளின் கருணையால் தப்பித்துள்ளது. ஆனால் தனது கணவரையும் உறவினர்களையும் இறந்துள்ளதாக Basbibi வருத்தம் தெரிவித்துள்ளார். அதிலும் அவரின் குடும்ப உறுப்பினரான குழந்தை முகமதுவின் தாத்தா சுல்தான் பிரித்தானியாவில் 1௦ நாட்களுக்கு முன்பு தான் குடியுரிமை பெற்றுள்ளார். அவர் கடந்த 2020 இல் இருந்து வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரித்தானியா வருவதற்காக விமான நிலையம் அருகே காத்திருந்த போது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டனில் வசிக்கும் சுல்தானின் இன்னொரு மகனான சக்ருல்லா தெரிவிக்கையில் “தலீபான்களின் பிடியில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற நினைத்த எனது தந்தை உயிர் தியாகம் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இது குறித்து பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “குழந்தை முகமது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவகிறது. தற்போதைய சூழலில் குழந்தையை விமானத்தில் அழைத்து வருவது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தையின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.