சட்ட விரோதமாக வெடிமருந்துகளை எடுத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் வெடிமருந்துகள் இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.