Categories
மாநில செய்திகள்

வெடித்த கீதா ஜீவன்-சசிகலா புஷ்பா பிரச்சனை…. DMK கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா பா.ஜ.க மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் இவர் அ.தி.மு.க முன்னாள் எம்பி ஆவார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பா.ஜ.க சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா புஷ்பா பங்கேற்றபோது தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார். இச்ம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக சசிகலா புஷ்பா நேற்று நாகர்கோவில் சென்றிருந்தார்.

இந்நிலையில் பிஎன்டி காலனியிலுள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி, வீட்டு கண்ணாடி, சேர், பூந்தொட்டிகள் போன்றவற்றை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதற்கிடையில் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதா ஜீவன் பற்றி அவதூறாக பேசிய சசிகலா புஷ்பா மீது வட பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தி.மு.க மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |