பீகார் மாநிலமான முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு விபத்தில் உயிரிந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
அதே சமயம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.